இந்தியா - அமெரிக்கா நட்பு... அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாண்மைக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் தருவதாகவும், எப்போதும் அமெரிக்க அதிபருடன் மோடி தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடி மிகச்சிறந்த பிரதமர் எனவும் அவருடன் எப்போது நட்பாக இருக்கவே விரும்புவதாகவும், சமீபகாலமாக மோடியின் சில செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறி இருந்தார். மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்து எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை என டிரம்ப் கூறி குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி தனது X பக்கத்தில், டிரம்பின் இந்த பேச்சை வரவேற்பதாகவும், ட்ரம்பின் இக்கருத்தை வரவேற்பதாகவும், இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச விவகாரங்களில் தொடர்ந்தே பயணிக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இது பற்றிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.