உற்சாகம் பொங்க தாய் வீட்டிற்கு திரும்பிய பென்குயின்கள்..! கண்கொள்ளா காட்சி
அர்ஜெண்டினாவில் தாய் வீட்டிற்கு திரும்பிய பென்குவின்களை பற்றி தற்போது பார்க்கலாம்....
உடல் நலன் பாதிக்கப்பட்டு ரொம்ப மோசமான நிலைல மீட்கப்பட்ட 11 பென்குவின்கள் சிகிச்சை முடிஞ்சு மறுபடியும் ஜாலியா தங்களோட தாய் வீடான கடலுக்கே திரும்புச்சுங்க...
அர்ஜென்டினாவின் Mundo Marino அறக்கட்டளையால மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது இந்த மெகல்லானிக் பென்குயின்களுக்கு...
பியூனஸ் அயர்ஸ் கடற்கரையோட வெவ்வேறு இடங்கள்ல கண்டுபிடிக்கப்பட்ட இந்த பென்குவின்கள் ரொம்ப சோர்வா...ஊட்டச்சத்து குறைபாடோட...வீக்கா இருந்துருகுங்க...
அதுங்கள பத்திரமா மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுச்சு...
உடம்பு தேறுனதும் அந்த பென்குவின்கள கடல்ல விடுவிச்சாங்க...
ரொம்ப க்யூட்டா..அப்டியே தத்தி தத்தி அதுங்க கடலுக்கு போற அழக நீங்களே பாருங்க...