"இந்தியா - மாலத்தீவு உறவு கடல்போல் ஆழமானது"
இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவு கடல்போல் ஆழமானது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மாலத்தீவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவின் வேர்கள் வரலாற்றை விட பழமையானது என தெரிவித்துள்ளார். மாலத்தீவின் மிகவும் நம்பகமான நண்பராக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது என்றும் மோடி பேசியுள்ளார்., மாலத்தீவுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா ஒதுக்கி இருப்பதாகவும், இது மாலத்தீவின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு உந்துதல் அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.