அமெரிக்க ஒபன் டென்னிஷ் ஓபன் போட்டிகளுக்கான பரிசுத் தொகை கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் உயர்த்தப்பட்டு, 789 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 7ம் தேதி வரை நடக்கும். ஒற்றையர் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு 43 கோடியே 84 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதே போன்று, இரண்டாம் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு 21 கோடியே 92 லட்சம் ரூபாயும், அரையிறுதியில் தகுதி பெறுவோர்க்கு 11 கோடி ரூபாயும், காலிறுதி தகுதி பெறுவோரக்கு 5 கோடியே 80 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இரட்டை பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு 41 கோடியே 89 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.