வடகொரியா எடுத்த முரட்டுத்தன முடிவு - முகத்தில் அடித்த கிம்

Update: 2025-08-05 06:05 GMT

நெருக்கம் காட்ட விரும்பும் தென் கொரியா - விரும்பாத வடகொரியா

தனது நாட்டின் எல்லையில் வடகொரியாவுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை தென்கொரியா ராணுவம் அகற்றி உள்ளது. அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள லீ ஜே மியுங் , வடகொரியா உடனான தென்கொரியாவின் பதற்றத்தை தணிக்க விரும்புவதாகவும், மீண்டும் வடகொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால் அவரது இந்த அழைப்பை வடகொரியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. முன்னதாக வடகொரியா ஆட்சியை விமர்சிக்கும் பிரச்சார ஒளிபரப்புகளை புதிய அரசாங்கம் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்