Nigeria | துப்பாக்கி முனையில் ஆசிரியர்கள், மாணவர்கள் கடத்தல்.. அச்சத்தில் நைஜீரியா மக்கள்
துப்பாக்கி முனையில் ஆசிரியர்கள், மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல், மாணவர்களையும், ஆசிரியர்களையும் கடத்திச் சென்று பல நாட்கள் ஆகியும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தேடி வருகின்றனர். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியை, தனது கணவரை கட்டிப் போட்டு விட்டு, தன் மகளை துப்பாக்கி மிரட்டி, கடத்திச் சென்றதாக விவரித்தார். அந்த பகுதியில், பணத்திற்காக ஆட்களைக் கடத்திச் செல்லும் கும்பல்கள் இருப்பது பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.