நியூயார்க்கில் பெய்த கனமழையின் காரணமாக நகரில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கபாதையில் மழைநீர் புகுந்தது. இது குறித்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெள்ளநீர் மெட்ரோ ரயிலுக்குள் புகுந்த நிலையில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வெள்ளம் காரணமாக நியூயார்க்கில் மெட்ரோ ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...