நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 43 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த மோதலில் வீடுகள், அரசியல் கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க காத்மாண்டுவில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.