பரபரப்பான மார்க்கெட்டில் சரமாரி துப்பாக்கிசூடு - பாங்காக்கில் அதிர்ச்சி
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் சொல்லப்பட்டுள்ளனர்.
காய்கறி சந்தையில் பாதுகாவலர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய அந்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபர் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.