ஆறாக ஓடும் நெருப்பு பிழம்பு... வெடித்து சிதறிய எரிமலை - வெளியான திக் திக் ட்ரோன் காட்சி
இத்தாலி நாட்டில் அமைந்துள்ள எட்னா எரிமலை வெடித்துசிதறி, நெருப்பு பிழம்புகள் வெளியேறி வருகின்றன. இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ள நிலையில், நெருப்பு பிழம்பு காரணமாக கரும்புகை சூழ்ந்துள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றில் சாம்பல் பறப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்த ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.