Mobile Phone Ban | செல்போனுக்கு `தடை’ - பள்ளி சிறார்கள் நலன் கருதி அதிரடியாக அறிவித்த தென் கொரியா
தென்கொரியாவில் பள்ளி குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை
தென்கொரியாவில் பள்ளிகளில் செல்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து காணப்படும் நிலையில், சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.