அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தில், மெக்சிகோ கடற்படை கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 277 பேருடன் சென்ற மெக்சிகன் கடற்படைக் கப்பல், நியூயார்க்கின் புரூக்ளின் பாலத்தில் மோதியதில் 19 பேர் காயமடைந்தனர். கப்பலின் 147 அடி உயர கம்பங்களில் இரண்டு, பாலத்தில் மோதுவதற்கு முன்பு, துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் படம்பிடித்தனர். விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கப்பல், பாலத்தின் மீது மோதியபோது அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர்