பனாமாவில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி உயிரிழந்தார். வெனிசுலா மற்றும் கொலம்பியாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள், 3 படகுகளில் சென்று கொண்டிருந்தனர். இதில்,
குழந்தைகள் உட்பட 21 பேருடன் சென்ற ஒரு படகு பனாமா எல்லை அருகே கவிழ்ந்தது. இதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், வெனிசுலாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்ததாக, பனாமா தேசிய எல்லை சேவை அமைப்பினர் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.