Kenya Ex Prime Minister | இறுதியாக ஒரு முறை `ரைலா' முகத்தை பார்க்க குவிந்த மக்கள்
கேரளாவில் மாரடைப்பால் உயிரிழந்த கென்யாவின் மக்கள் செல்வாக்கு மிகுந்த எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்காவின் உடல் கென்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது தங்களது தந்தையாக 'ரைலா'வை போற்றி வந்த மக்கள் அவரது இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் விமான ஓடுபாதைக்குள் உணர்ச்சி பொங்க அழுதவாறு திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கென்ய ராணுவத்தினரும் போலீசாரும் போராடினர்.. இதனால் விமான நிலையத்தில் சில மணி நேரம் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அவரது உடலை கென்யா நாடாளுமன்ற வளாகத்திற்கு எடுத்துச் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. நைரோபி மைதானத்தில் ஒடிங்காவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட இருந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் மக்களை கலைந்து செல்ல வலியுறுத்தி வானத்தை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டனர்...எந்த அளவிற்கு மக்களின் பேரன்பிற்குரிய தலைவராக ஒடிங்கா வாழ்ந்து மறைந்துள்ளார் என்பதை அவரது இறுதி ஊர்வலத்தில் கடல் அலை போல் திரண்டு கண்ணீர் விட்டு கதறிய மக்களின் அழுகை வெளிப்படுத்தியது.