ஜனநாயகக் கட்சியினர் சுகாதாரச் செலவுகளை குறைப்பதில் அக்கறை காட்டுவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். ஆனால், அதிபர் டிரம்ப் மருந்து நிறுவனங்களோடு இணைந்து நடவடிக்கை எடுத்தபோதும், ஜனநாயகக் கட்சியினர் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார். இதனால், வெளிநாட்டினருக்கான சுகாதார நிதிக்கு பில்லியன் டாலர்களை கொடுக்க மாட்டோம் என்று கூறியதால், ஜனநாயக கட்சியின் சில பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.