இஸ்ரேலில் கொடூர தாக்குதல்.. பின்னணியில் யார்? மீண்டும் பதற்றத்தில் உலகம்
இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. டெல் அவிவ் (Tel Aviv) அருகே பேட் யாம் (Bat Yam) என்ற இடத்தில், வாகன நிறுத்துமிடங்களில்
நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் குண்டுவெடித்து தீப்பிடித்து எரிந்தன. இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து,
பேருந்து மற்றும் ரயில்களில் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் பின்னணி குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.