இஸ்ரேல் தாக்குதல் - காசாவில் 1,400 மருத்துவ பணியாளர்கள் பலி

Update: 2025-07-15 04:37 GMT

காசாவில், கடந்த 2 ஆண்டுகளில், இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். 360 மருத்துவ பணியாளர்களை இஸ்ரேலிய படைகள் கைது செய்துள்ளன. இதனால், ஆயிரக் கணக்கானோர் மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச நாடுகள், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 386-ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்