கொத்து கொத்தாய் உயிர்களை பொசுக்கிய இஸ்ரேல் - உலகையே நடுங்க விடும் பலி எண்ணிக்கை
இஸ்ரேல் தாக்குதலில் 63,557 பாலஸ்தீனியர்கள் படுகொலை
காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 63,557 ஆக உயர்ந்துள்ளது... மேலும் கிட்டத்தட்ட 160,660 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் 98 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 404 பேர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் பலியாகியுள்ளனர். இதனால் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை 348 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 127 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.