இஸ்ரேலை சல்லடையாக்கும் ஈரான் ராக்கெட்டுகள்... விடாமல் ஒலிக்கும் அபாய ஒலி...

Update: 2025-06-19 12:19 GMT

தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. டெஹ்ரான் மற்றும் அதனை சுற்றியுள்ள ராணுவ நிலைகள், அணு ஆயுத கட்டமைப்புகளை குறிவைத்து குண்டுவீசியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேலில் பெரிய நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், உயரமான கட்டிடங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. டெல் அவிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததாக துணை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

ஈரான் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதியில் வெடிச்சத்தமும், சைரன் ஒலியும் மக்களை அச்சமடையச் செய்தன.

இஸ்ரேலை நோக்கிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதல், ரமல்லா உள்ளிட்ட மேற்குகரை பகுதிகளை அதிரச் செய்தன.

இஸ்ரேலின் பீர்ஷீபா BEERSHEBA பகுதியில் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படும் வீடியோ காட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்