Iran Vs Israel War | Iran | Ali Khamenei | DonaldTrump | Netanyahu | ஈரானில் 610 பேர் மரணம்

Update: 2025-06-25 08:21 GMT

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 610 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி, கடந்த 13ம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானும் ஏவுகணைகள் மூல​ம் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானில் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருநாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையிலான 12 நாள் மோதலில் ஈரானில் 610 பேர் உயிரிழந்ததாகவும், 4 ஆயிரத்து 746 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய சுகாதார அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு தலைவர் ஹொசைன் கெர்மன்பூர் Hossein Kermanpour தெரிவித்தார்.

இதனிடையே, ஈரான் நடத்திய தாக்குதலில் 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் ராணுவ வானொலி தெரிவித்துள்ளது. ஏராளமான உள்கட்டமைப்பு தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்