Airbus நிறுவனத்துடன் கையெழுத்திட்ட IndiGo

Update: 2025-06-02 08:29 GMT

ஏ350-900 விமானங்களை கொள்முதல் செய்யும் இண்டிகோ நிறுவனம்

நாட்டின் மிகப்பேரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை நாட்டின் நீண்ட கால சர்வதேச விரிவாக்கத்திற்கான முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டில் இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் விமான கொள்முதல் ஆர்டரை 30-ல் இருந்து 60 ஆக உயர்த்தியது. இண்டிகோ மார்ச்.2026-ல் முடிவடையும் நிதியாண்டில் குத்தகைக்கு எடுக்கும் போயிங் 787 விமானங்களை, 10 புதிய நகரங்களுக்கு இயக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்