கார் மீது லாரி மோதி விபத்து - குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் கருகி பலி
அமெரிக்காவின் டல்லாஸில் நடந்த கார் விபத்தில் சிக்கி, ஹைதராபாத் கொம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கட் – தேஜஸ்வினி தம்பதியும், அவர்களின் 2 குழந்தைகளும் உடல் கருகி உயிரிழந்தனர். போலீஸ் விசாரணையின் படி, விடுமுறையை கழிக்க அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த இவர்கள், அட்லாண்டாவில் இருந்து டல்லாஸிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று, இவர்களது கார் மீது மோதியதால், கார் தீப்பிடித்து எரிந்தது. இதில், காரில் சிக்கியிருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.