3 நாளாக கொட்டிய கனமழை.. ஊரே வெள்ளக்காடான காட்சி - 4 பேர் மரணம்

Update: 2025-07-19 03:36 GMT

தென் கொரியாவில் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயல்வெளிகள்..

தொடர்ந்து மூன்று நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் தென் கொரிய தலைநகரான சியோல் அருகேயுள்ள சுங்சியோங் மாகாணத்தில் உள்ள வயல்வெளிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கனமழை காரணமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு மழைக்கு இதுவரை நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்