நியூசிலாந்தில் கனமழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தலைநகர் வெலிங்டனில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மணிக்கு 87 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.