நார்வே விண்வெளித் துறைமுகத்திலிருந்து ஏவப்பட்ட சில நொடிகளில் ஜெர்மனைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான இசார் ஏரோஸ்பேஸின் ஆளில்லா சோதனை ராக்கெட், நார்வே விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஏவப்பட்ட 40 வினாடிகளில் ராக்கெட் வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது. இது குறித்து கூறிய இசார் ஏர்ஸ்பேஸ் நிறுவனம், இந்த சோதனையின் மூலம் 30 விநாடிகள் ராக்கெட்டின் நிலையான அமைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.