நேபாளத்தை புரட்டி போட்ட GEN Z-க்கள்... மூன்று புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்பு

Update: 2025-09-15 17:47 GMT

நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசில், மூன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நேபாளத்தில் GEN Z போராட்டம் காரணமாக அந்நாட்டு அரசு கலைக்கப்பட்டது. தொடர்ந்து, இடைக்கால பிரதமராக சுசிலா கார்கியை, இளைஞர்கள் தேர்வு செய்தனர். இந்நிலையில், நேபாள அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் வகையில், மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன்படி, நிதி அமைச்சக முன்னாள் செயலாளர் ரமேஷ்வர் கனால் மத்திய நிதியமைச்சராக பதவியேற்றார். மூத்த வழக்கறிஞரான ஓம் பிரகாஷ் ஆர்யல் சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும், மின்துறை முன்னாள் இணை இயக்குநர் குல்மன் கிசிங் மின் துறை, நகர அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்