Germany Salad | வெட்டுக்கிளி வறுவல்.. வண்டு பொரியல்.. நான்வெஜ் பிரியர்களுக்கு அறிமுகமான புது சாலட்

Update: 2025-11-21 04:18 GMT

நீங்கள் மத்தி நெத்திலி போன்ற மீன் வகைகளை விரும்புபவர்கள் என்றால் நிச்சயம் இந்த வெட்டுக்கிளி வறுவல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார், இந்த ஜெர்மன்காரர்... சாலட் வகைகளுக்கு பெயர் போன இந்த கஃபேயில்... நீங்கள் வழக்கமாக எதிர்பார்க்கும் சாலட்களை பார்க்க முடியாது... இங்கு சாலட்கள் மீது சுடச்சுட வறுத்த புழுக்களும், பூச்சிகளும் வண்டுகளும் பரிமாறப்படுவது ஜெர்மனியர்களுக்கே புதுசு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.... பல ஜெர்மனி மாணவர்கள் தாங்கள் ஆசிய நாடுகளுக்கு பயணித்த போது அங்கு ஜெர்மானியர்களுக்கு பழக்கப்படாத பல வினோதமான பூச்சி உணவு வகைகளை ருசித்ததாக கூறியதைக் கேட்டு, மெனு கார்டில் அந்த பூச்சி வகைகளை நாம் ஏன் அறிமுகப்படுத்த கூடாது என வறுத்த பூச்சிகள் ... பொறித்த வண்டுகள் என தடல்புடலான ஐட்டம்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது , மார்பர்க்கில் உள்ள இந்த கஃபே.. ஆனால் இதனை மக்கள் இந்த அளவிற்கு விரும்பி உண்பார்கள் என்பது இந்த கஃபே நடத்துபவர்களே எதிர்பார்க்காத ஒன்று..."

Tags:    

மேலும் செய்திகள்