Flight | வான் பரப்பில் திடீரென பறந்து வந்த மர்ம பொருள்.. அவசர அவசரமாக திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

Update: 2025-10-05 07:25 GMT

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியாவில், வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் அச்சுறுத்தல் காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வில்னியஸ் Vilnius விமான நிலையத்தின் வான்பரப்பில் வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் அத்துமீறி பறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,

விமானப் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. அதுகுறித்த தகவல் விமான கண்காணிப்பு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்தில் சனிக்கிழமை ட்ரோன்கள் பறந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்