இந்தியாவோடு கை கோர்க்கும் FBI - அமெரிக்காவின் அதிரடி முடிவ பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் இந்திய அரசுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் பட்டேல் தெரிவித்தார். பயங்கரவாதத்தால் உலகம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் நினைவூட்டல் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், எக்ஸ் தளத்தில் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.