``நண்பனா இருந்தாலும் நம்ப மாட்டேன்’’ - சீனாவில் கிம் பார்த்த வேலை

Update: 2025-09-04 09:30 GMT

கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ ரகசியத்தை காத்த உதவியாளர்கள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தபின், கிம் ஜாங் உன்னின் உதவியாளர்கள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நடைபெற்ற வெற்றிநாள் அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இச்சந்திப்பு முடிந்ததும், கிம் ஜாங் உன் தண்ணீர் குடித்த கிளாஸை அவரது உதவியாளர்கள் எடுத்துச் சென்றதுடன், கிம் ஜாங் உன் அமர்ந்த இருக்கை மற்றும் அவர் தொட்ட மேஜை ஆகியவற்றை கிருமி நாசினியால் துடைத்தனர். கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்த பிரச்சினைகள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே, அவரது உதவியாளர்கள் இதுபோன்று செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்