Elephant | குட்டியை இழுத்து சென்ற முதலை - பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை
இலங்கை, குருநாகல மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் யானைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, ஆற்றில் நீர் குடிக்க இறங்கிய குட்டி யானையை முதளை ஒன்று ஆற்றுக்குள் இழுத்து சென்றது. இதனை கண்ட தாய் யானை, தனது குட்டியை காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கியது. குட்டி யானையை முதளை இழுத்து சென்ற நிலையில் தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.