டிரம்ப்பின் முதல் அறிவிப்பால் வீழ்ச்சியில் இந்திய பங்கு சந்தை -ஒரே நாளில் ரூ.7.48 லட்சம் கோடி இழப்பு

Update: 2025-01-21 15:50 GMT

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அறிவித்ததால், இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது, இன்று ஆயிரத்து 235 புள்ளிகள் சரிந்த மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ், 75 ஆயிரத்து 838ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 299 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 45ஆக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் மொத்தம் 7.48 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்