Trump vs Trudeau | ``பழிக்கு பழி.. பின்வாங்க போவதில்லை'' - ட்ரம்ப்புக்கு வந்த அதிர்ச்சி
அமெரிக்காவுடனான இந்த வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சில அமெரிக்க பொருட்கள் மீது 25 சதவீத வரியும், 21 நாட்களுக்கு பிறகு அடுத்தக்கட்ட அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது 25 சதவீத வரியும் விதிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக பால் பொருட்கள், இறைச்சிகள், தானியங்கள், ஒயின், பீர், ஆடைகள், காலணிகள், மோட்டார் சைக்கிள்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சில கூழ் மற்றும் காகித பொருட்கள் மீது கனடா வரி விதிக்கவுள்ளது.