Donald Trump | Russia Ukraine War | டிரம்பின் 2ஆவது Attempt - என்ன ஆகும்? எதிர்பார்ப்பில் உலகம்!

Update: 2025-10-17 09:29 GMT

ஹங்கேரியின் படாபெஸ்ட் நகரில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் சூழலில், போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்துவந்தது. இதில் இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படாததால், புதினை 2-ஆவது முறையாக சந்தித்து பேச டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் போர் நிறுத்த விவகாரத்தில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் ஹங்கேரியில் புதினை சந்தித்து பேச டிரம்ப் முடிவு செய்திருக்கிறார். முன்னதாக புதினை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், இருவரும் நீண்ட நேரம் பேசியதாகவும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும், அதே பாணியில் உக்ரைன், ரஷ்யா போரும் முடிவுக்கு வரும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்