அசுரனை இறக்கும் அமெரிக்கா... அதிரும் மத்திய கிழக்கு.
சவுதி அரேபியாவிற்கு F-35 போர் விமானங்களை விற்க,அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த F 35 விமானங்களை நீண்ட காலமாக சவுதி கேட்டு வருகிறது... ஆனால் இதுவரை அமெரிக்காவிற்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது. ஏனெனில், மத்திய கிழகு பிராந்திய பகுதியில் இஸ்ரேல் மட்டுமே மேம்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பதை அமெரிக்கா வழக்கமாக உறுதி செய்யும்... ஆனால் இம்முறை அமெரிக்காவின் சக்தி வாய்ந்த F35 போர் விமானங்களை சவுதிக்கு வழங்க ட்ரம்ப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். ஆனால் இதை ஈரான் அச்சுறுத்தலாக பார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.