Donald Trump | Ali Khamenei | இறங்கி வந்த டிரம்பின் மூக்கை உடைத்து உலகிற்கே அலி கமேனி சொன்ன செய்தி

Update: 2025-10-21 03:55 GMT

ஈரானுடன் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை, ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளார். ஈரானின் அணுசக்தி ஆயுதங்களை அழித்து விட்டதாக டிரம்ப் கூறியதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த வாரம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், ஈரானுடன் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த தாம் விரும்புவதாகவும், பேச்சுவார்த்தை நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். இதுகுறித்து ஈரான் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் வந்தால், அது ஒப்பந்தம் அல்ல, மிரட்டல் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்