Donald Trumb Vs Ali Khamenei | ஓவராக ஆடிய டிரம்புக்கு தனது ஸ்டைலில் நெத்தியடி அடித்த அலி கமேனி
அமெரிக்க அதிபர் டிரம்ப் உண்மையிலேயே சக்தி வாய்ந்த தலைவராக இருந்தால் அவருக்கு எதிராக அமெரிக்காவில் கோஷமிடும் மக்களை அவர் முதலில் அமைதிப்படுத்தட்டும் என ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்ததாக டிரம்ப் கூறியதை நிராகரித்த அவர், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பையும் நிராகரித்தார்