Ditwah Cyclone | தமிழகத்துக்கு வரும் முன்பே 56 உயிர்களை பறித்து `டிட்வா’ கோரதாண்டவம்

Update: 2025-11-28 09:17 GMT

இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் 12,513 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், மொனராகலை, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு நிலச்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்