Diesel | Ecuadorian கைமீறி சென்ற கலவரம்.. காவல் நிலையத்தையே தீ வைத்து கொளுத்திய ஈகுவடார் மக்கள்
ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டதால், 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதை மீறி ஓடாவலோ நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர்.