பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு? - ஹாஸ்பிடலில் குவிந்த ரசிகர்கள்.. வெளியான முக்கிய தகவல்
கொலம்பியா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா, வயிறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெரு நாட்டின் லிமா நகருக்கு வந்த ஷகிராவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், மருத்துவமனை முன்பு திரண்டு, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.