Central Govt | அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு மறுப்பு

Update: 2025-08-09 03:27 GMT

அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு மறுப்பு

அமெரிக்காவுடனான ஆயுத கொள்முதல் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என்று மத்திய அரசு மறுத்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார். வரி விதிப்பு தொடர்பான இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு மறுத்துள்ளது. அதன்படி, அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை . பல்வேறு கொள்முதல் செயல்முறைகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்