Brazil Tornado | உருக்குலைந்த பிரேசில்.. சூறையாடிய சூறாவளி.. தரைமட்டமான பரிதாபம்
பிரேசிலில் சூறாவளி- 6 பேர் பலி, 90% கட்டிடங்கள் சேதம் பிரேசில் நாட்டின் ரியோ போனிடோ நகரில் தாக்கிய சூறாவளி புயலால் அங்குள்ள 90 சதவீத கட்டிடங்கள் உருக்குலைந்துள்ளன. மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இடிபாடுகளை டிராக்டர் மூலம் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்த நிலையில், சேதங்களை மதிப்பிட்டு நிவாரண உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி தாக்குவதற்கு முன்பும் தாக்கிய பிறகும் ஏற்படுள்ள மாற்றம் குறித்த செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.