2625 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 31 பேர் பலி.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
பொலிவியா நாட்டிலுள்ள பொட்டோசி நகர் அருகே 2 ஆயிரத்து 625 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 குழந்தைகள் உள்பட 14 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளைவுகள் அதிகம் கொண்ட யோகல்லா மலைப்பாதையில், பேருந்து அதி வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.