திடீரென மைதானத்திற்குள் படையெடுத்த பறவைகள் - போட்டி நிறுத்தம்

Update: 2025-06-30 15:13 GMT

மைதானத்திற்குள் படையெடுத்த கடற்பறவைகள் - போட்டி நிறுத்தம்

இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின்போது, சீகல் Seagull எனப்படும் கடற்பறவைகள் மைதானத்திற்குள் படையெடுத்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. சோமெர்செட் மற்றும் நாட்டிங்காம்ஷைர் Somerset vs Nottinghamshire இடையிலான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மைதானத்திற்குள் அதிக எண்ணிக்கையில் சீகல் பறவைகள் வந்தன. இதனால் வீரர்கள் ஃபீல்டிங் செய்ய சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு சீகல் பறவைகளை விரட்டிய பின்னர் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்