Bangladesh | ஷேக் ஹசீனா வழக்கில் இன்று தீர்ப்பு - வங்கதேசம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு
வங்கதேசத்தில் தேசிய முடக்கத்தை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கலவரத்திற்கு முக்கிய காரணம் முன்னால் பிரதமர் ஷேக் ஹசீனா என்று கூறப்பட்டதை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. தற்போது, சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.