Australia | `தாலிஸ்மான் சாப்ரே' 40 ஆயிரம் வீரர்களுடன் 19 நாடுகள் இணைந்து பிரமாண்ட போர் பயிற்சி

Update: 2025-07-15 15:01 GMT

அமெரிக்கா உள்பட 19 நாடுகளுடன் இணைந்து ஆஸ்திரேலியா பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 'ஹிமார்ஸ்' (HIMARS) எனப்படும் ஏவுகணைகளை ஏவும் வாகனத்தை ஆஸ்திரேலியா முதல் முறையாக பயன்படுத்தியுள்ளது. 'தாலிஸ்மான் சாப்ரே' என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டு போர் பயிற்சியில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர் உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த, 40 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போர் விமானங்கள், நிலத்தில் இருந்து நீண்ட தூரம் தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள் வைத்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்