Australia | Malabar Gold | ஆஸ்திரேலியாவில் திறக்கப்பட்ட மலபார் கோல்ட் மற்றும் டைமண்ட்ஸ் புதிய ஷோரூம்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ஸின் 2வது ஷோரூமை பாலிவுட் நடிகரும் அந்நிறுவனத்தின் தூதருமான அனில் கபூர் திறந்து வைத்தார். 14 நாடுகளில் 410க்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்டு உலகளவில் 5வது பெரிய நகை ரீடெய்லரான மலபார் கோல்ட் அண்ட் டைமன்ட்ஸின் புதிய ஷோரூம் திறப்பு விழாவில் மலபார் குழுமத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம், நிர்வாக இயக்குநர்கள் நிஷாத், வீரன்குட்டி, தலைமை டிஜிட்டல் அதிகாரி ஷாஜி கக்கோடி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ஸின் சர்வதேச செயல்பாடுகள் மேலாண்மை இயக்குநர் ஷாம்லால் அகமது, மூத்த இயக்குநர் மயங்குட்டி, உற்பத்தி தலைவர் பைசல், நிதி மற்றும் நிர்வாக இயக்குநர் அமீர், மற்றும் மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.