அர்ஜென்டினாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 19 பேர் காயம் அர்ஜென்டினாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். பியூனர்ஸ் அயர்சில் Buenos Aires நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து, ரயில் சேவை பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. ரயில் தடம்புரண்டதும் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்தவர்களை அவசரகால மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.