அமெரிக்காவில் தேர்தல் வாக்களிப்பில் அறிவிக்கப்பட்ட மாற்றம் - அதிரடி காட்டிய டிரம்ப்.

Update: 2025-08-31 09:43 GMT

அமெரிக்காவில் ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம்...விதி விலக்குகள் கிடையாது...இதை நிறைவேற்ற ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார் மேலும், மிகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் தொலைதூரத்தில் உள்ள ராணுவ வீரர்களைத் தவிர, தபால் மூலம் வாக்களிக்க மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தல் முறை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் டிரம்ப், கடந்த 2020ம் ஆண்டில் ஜோ பைடனிடம் தான் பெற்ற தோல்வி, மோசடியான விளைவு என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்