மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்ய அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் சந்திக்கத் தயார் என, ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் வலுவான பொருளாதார உறவுகளைப் பேணும் நாடுகளுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மோதலை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதாக புதின் குற்றம் சாட்டினார். உக்ரைன் நிலைமைக்கும் சமீபத்திய வர்த்தக நடவடிக்கைகளுக்கும் உள்ள தொடர்பை நிராகரித்த புதின், வர்த்தக கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த இதுபோன்று திணிக்கப்படுவதாக குறை கூறினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தயாராக இருந்தால், அவர் மாஸ்கோவிற்கு வரலாம் என்று தெரிவித்த புதின், சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்... நன்கு திட்டமிட்ட ஆக்கப்பூர்வமான விளைவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.